பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளி, மஞ்சள் பயிருக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் குறுவட்ட விவசாயிகள் மரவள்ளி மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து உதவி இயக்குனர்அன்பழகன் விடுத்துள்ள செய்துக்குறிப்பு:திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் குறுவட்டத்திற்குட்பட்ட சோழவாண்டியபுரம், பனப்பாடி, பாடியந்தல் மற்றும் பொன்னியந்தல் கிராமங்களில் நடப்பு பருவத்தில் மரவள்ளி மற்றும் மஞ்சள் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்.இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிப்படைந்தால் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும். மரவள்ளி ஏக்கர் ஒன்றுக்கு 1,334 ரூபாயும், மஞ்சள் பயிர் செய்த விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 1,899 ரூபாயும் காப்பீட்டு தொகையாக செலுத்த வேண்டும்.அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமிய தொகையை செலுத்தலாம். மேலும், உழவர் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கு நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவை.மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள்ளும், மரவள்ளி விவசாயிகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்ளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X