பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா அலுவலகத்தில் தானியங்கி சானிடைசர்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் தானியங்கி சானிடைசர் வழங்கும் இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.கொரோனா பரவலைத் தடுக்க தனி நபர்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வரும் நிலையில், அரசு அலுவலகங்களிலும் அதற்கு இணையாக தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால், கூடுதல் கவனத்துடன் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு, திருக்கோவிலுார் தாலுக்கா அலுவலக நுழைவு வாயிலில், தானியங்கி சானிடைசர் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது.தாசில்தார் சிவசங்கரன் தானியங்கி சனிடைசர் வழங்கும் இயந்திரத்தின் செயல்பாட்டைத் துவக்கி வைத்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் கங்காலட்சுமி, வருவாய் உதவியாளர் சிட்டிபாபு உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X