தமிழ்நாடு

அதிருப்தி; பொதுப்பணித் துறையினர் மீது விவசாயிகள்...கோமுகி அணை பராமரிப்பில் அலட்சியம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

கச்சிராயபாளையம்; கோமுகி அணை பராமரிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், கரை பகுதிகளில் மரங்கள் வளர்ந்து, தடுப்புக் கட்டைகள் சேதமடைந்துள்ளன.

இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கல்வராயன்மலை அடிவாரத்தில், 46 அடியுள்ள கோமுகி அணையின் நீரின் மொத்த கொள்ளளவு 560.96 மில்லியன் கன அடி ஆகும். அணையின் பழைய மற்றும் புதிய பாசனத்தின் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.பழைய பாசனமான கோமுகி ஆறு மூலம் 46 கிராமங்களில் உள்ள 5,860 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதே போல் புதிய பாசன கால்வாய் மூலம் மாத்துார், மண்மலை, கரடிசித்துார், செல்லம்பட்டு உட்பட 7 கிராமங்களில் உள்ள 5000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.கோமுகி ஆற்றில் வடக்கனந்தல், சோமண்டார்குடி, கள்ளக்குறிச்சி, நாகலுார், வேளாகுறிச்சி உட்பட 11 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டுகள் மூலம் 4125.56 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.மேலும், இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏரிகள் கோமுகி அணையின் மூலம் நீராதாரம் பெறுகிறது. கோமுகி அணை இப்பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.இந்நிலையில், பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணை, அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் பராமரிப்பின்றி உள்ளது. ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் அணை பராமரிப்பு பணிக்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறது.இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக செலவு செய்து பராமரிப்பு பணியை மேற்கொள்ளவதில்லை.

அணை கரையின் மேற்பகுதியில் உள்ள தடுப்பு கட்டைகள் பல இடங்களில் உடைந்து சேதமாகி வருகிறது. மேலும், அணையின் கரையில் மரங்கள் வளரத் துவங்கியுள்ளன. இதன் வேர் பகுதி கரை பகுதியை உடைக்கும் அளவிற்கு வியாபிக்கத் துவங்கியுள்ளன.மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அணையின் கரை சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் இத்தகைய அலட்சிய போக்கினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.எனவே, இனியும் தாமதிக்காமல் கோமுகி அணையின் தடுப்புக் கட்டைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்யவும், கரைகளில் வளரும் மரங்களை அகற்றவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X