கலெக்டர் அலுவலக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் மற்றும் மக்களுக்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் பழுதடைந்து பயன்பாடில்லாமல் உள்ளது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறை அலுவலகங்கள் உள்ளது. இங்கு துறைசார்ந்த கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.இதையொட்டி, அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிக்கப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதானதால் இங்கு வரும் பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிபட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து சுத்திகரிப்ப இயந்திரத்தை சரி செய்துமீண்டும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X