பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் அரசு கண் மருத்துவமனையில் பரிசோதனை குறைவு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனம் அரசு கண் சிகிச்சை மருத்துவமனை, கொரோனா பரிசோதனை மையமாக நேற்று முதல் செயல்பட துவங்கியது.திண்டிவனம் நகராட்சி பகுதியில் ஜெயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் பரிசோதனை மையம் இருப்பதால், குறைவான அளவிலேயே பரிசோதனை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து தினமலர் நாளிதழில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என செய்தி வெளியானது.இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், திண்டிவனம் பழைய நகராட்சி அலுவலகம், கொரோனா பரிசோதனை மையமாக மாற்றப்பட்டது. இதே போல் அரசு மருத்துவமனையில் பிரவச வார்டு இருப்பதால், மருத்துவமனைக்கு எதிரிலுள்ள அரசு கண் மருத்துவமனை கட்டடத்தில் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் சண்முகம் உத்தரவிட்டார்.இதன் பேரில் திண்டிவனம் அரசு கண் சிகிச்சை மருத்துவமனை நேற்று முதல் கொரோனா பரிசோதனை மையமாக மாற்றம் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி சாந்தகுமாரி மேற்பார்வையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X