தமிழ்நாடு

மஞ்சளாறு அணை தூர்வாரப்படுமா

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement
மஞ்சளாறு அணை தூர்வாரப்படுமா

தேனி: மாவட்டத்தில் மஞசளாறு அணையை தூர் வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடியாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வரட்டாறு, மூலாறு, தலையாறு பகுதியில் பெய்யும் மழை நீர் அணையில் தேங்குகிறது.

இதன் மூலம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, புல்லக்காபட்டி, அட்டணம்பட்டி, சாத்தாகோவில்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி கிராமங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு, குன்னுவராயன்கோட்டை, கண்ணாபட்டி, கட்டக்காமன்பட்டி கிராமங்களில் 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று நெல், வாழை, கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

நேற்றைய நீர்மட்டம் 35 அடியாக இருந்தது. நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை.துார்வார ஆய்வு இந்த அணையில் 29 அடி வரை மண் மேவியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் கூடுதல் நீரை தேக்க முடியவில்லை.

இந்நிலையில் அணையை துார்வாருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு ஆண்டுக்கு முன் ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்தனர். அதன்பின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தங்கள் நலன் கருதி அணையை விரைந்து துார்வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X