இந்தியா

வெடிகுண்டு வீசி மிரட்டிய மூவருக்கு போலீஸ் வலை

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

கண்டமங்கலம்; கோவில் வளாகத்தில் மது குடித்ததை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசி மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கண்டமங்கலம் அடுத்த முட்ராம்பட்டு பழைய காலனியில்உள்ளமாரியம்மன் கோவில்வளாகத்தில்,கடந்த 15ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், 21, சிவசங்கர்,20; சந்துரு, 22; கவுதம்,20; கதிரவன்,20; ஆகியோர் மது குடித்துள்ளனர். இதை தட்டிக் கேட்ட, ஊர் நாட்டாண்மை மாயவன், 65;என்பவரைஅந்த கும்பல் தாக்கியது. தடுக்க முயன்றஆனந்தகிருஷ்ணன், 30, அவரது மனைவி அன்பரசி, 23; ஆகியோரையும் தாக்கியது. இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதனால்ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமாரின் கூட்டாளிகள், முட்ராம்பட்டு புதுகாலனி இளஞ்செழியன், கொடாத்துார் மணவெளி முரளி, 22; அஜித், 23; ஆகியோர், கடந்த 18ம் தேதி மாலை 3.00 மணியளவில் முட்ராம்பட்டுசென்று,போலீசில் புகார் கொடுத்தவர்களை கொலை செய்யாமல் விடமாட்டோம் என மிரட்டல் விடுத்து,நாட்டு வெடிகுண்டை சாலையில் வீசினர்.குண்டு வெடித்ததில்யாருக்கும் பாதிப்பில்லை. கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, இளஞ்செழியன் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X