இந்தியா

பைக் மீது லாரி மோதல் தம்பதி படுகாயம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

பாகூர்; பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் தம்பதி படுகாயமடைந் தனர்.அரியாங்குப்பம் அடுதத மணவெளி கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் சங்கரன் 48; இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் பாகூரில் இருந்து வீட்டிற்கு பைக்கில், புறப்பட்டார்.பாகூர் ஏரிக்கரை அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே சென்ற போது, அவ்வழியாக சென்ற டி.என். 22 பிபி 1876 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. அதில், சங்கரன், அவரது மனைவி கலா இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவரான கடலுாரை சேர்ந்த கோவிந்தன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X