இந்தியா

ஜி.எஸ்.டி., இழப்பீடு ரூ.490 கோடியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020
Share
Advertisement
 ஜி.எஸ்.டி., இழப்பீடு ரூ.490 கோடியை  மத்திய அரசு வழங்காமல் உள்ளது

புதுச்சேரி; 'ஐந்து மாதங்களுக்கான ஜி.எஸ்.டி., இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்காமல் உள்ளது' என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்ட திருத்த மசோதாவை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை அமல்படுத்தி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொண்டது. மாநிலங்களுக்கு வரி இழப்பு ஏற்பட்டால் ஈடுசெய்வதாகவும் மத்திய அரசு உறுதி அளித்தது. 14 சதவீதம் அளவுக்கு வரி இழப்பு ஏற்பட்டால் வரி இழப்பை ஈடு செய்வதாக சட்டம் கொண்டு வரப்பட்டது.புதுச்சேரியை பொருத்தவரை வரி வருவாயை நம்பி உள்ளமாநிலம்.கடந்த காலத்தில் விற்பனை வரி விதிக்கும்அதிகாரம் நம்மிடம் இருந்தபோது, தமிழகத்துடன் ஒப்பிட்டு வரி குறைவாக விதிக்கப்பட்டதால் புதுச்சேரியில் நிறைய வியாபாரம் நடந்தது. மின் சாதனங்கள், மோட்டார் உதிரி பாகங்கள் போன்ற பொருட்களின் விலை குறைவாக இருந்தது

.தற்போது, 51 சதவீதம் அளவுக்கு மாநிலத்துக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இழப்பீட்டுதொகையை காலம் தாழ்த்தியே மத்திய அரசு வழங்கி வருகிறது.கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஜி.எஸ்.டி., இழப்பீடு முறையாக கிடைக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை சேர்த்து டிசம்பரில் தந்தனர். அக்டோபர், நவம்பருக்கு பிப்ரவரியில் அளித்தனர். மார்ச் மாதத்தில் இருந்து 5 மாதங்களுக்கான வரி இழப்பீடு ரூ.490 கோடியை மத்திய அரசு தரவில்லை.மத்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதி உள்ளேன். செஸ் வரி இல்லாத காரணத்தால் தரஇயலவில்லை என்கின் றனர்.மத்திய அரசின் நிதியில் இருந்து வழங்க வேண்டும் என மாநிலங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். மத்திய அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது

.மத்திய ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் கொண்டு வரும்போதும், மாநில ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளோம்.இவ்வாறு, முதல்வர் நாராயணசாமி கூறினார்.தொடர்ந்து, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X