இந்தியா

சட்டசபையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்...கவர்னரின் செயல்பாட்டை கண்டித்து காரசாரம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:லட்சுமிநாராயணன்: டாக்டர்களின் மரியாதையை குறைக்கும் வகையில் மிக அநாகரீகமாக கவர்னர் பேசி உள்ளார். உள்ளூர் அதிகாரிகளை மிரட்டுகிறார்; ஆனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அன்பாக நடத்துகிறார்.புதுச்சேரி அரசை இயங்க விடாமல் தடுப்பதற்கு கூட்டமாக சேர்ந்துள்ளனர். உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் மருத்துவ அதிகாரிகளை கீழ்த்தரமாக பேசுவது நாகரீகம் கிடையாது. 'ஐ வில் ேஹங்க் யூ' என்கிறார். கவர்னர் மீது சபையில் கண்டன தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். டாக்டர்களை காக்கும் பொறுப்பு நமக்குள்ளது.அனந்தராமன்: மருத்துவ அதிகாரியை தரம் தாழ்த்தி பேசுவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளிடம் பாகுபாடு பார்க்கப்படுகிறது. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருக்கு கண்டனத்தை சபையில் பதிவு வேண்டும்.சிறப்பாக செயல்படுகின்ற சுகாதாரத் துறையினருக்கு களங்கம் விளைவிக்க பார்க்கிறார்.ஜெயமூர்த்தி: ஜூலை மாத சம்பளம் கிடைக்காது என்கிறார். நாம் சுதந்திரம் கிடைத்துதான் வாழ்கிறோமா? அடிமையாக வாழ்கிறோமா? என சந்தேகமாக உள்ளது. பட்ஜெட்டுக்கு கையெழுத்திட மறுத்தால் நான் தீக்குளிப்பதற்கு தயாராக உள்ளேன். பொறுத்தது போதும்.சிவா: மண்ணின் உரிமையை, மாநில உரிமையை, சுயமரியாதையை சீண்டி பார்க்கிறார். தற்போது மருத்துவ அதிகாரிகளை கேவலமாக நடத்தி உள்ளார்.டாக்டர்கள் போராட்டம் நடத்தாமல் பணியாற்றிக் கொண்டுள்ளனர். இந்த சபையில் பேசினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பொய்யாக்காமல், நாடே திரும்பி பார்க்கும் வகையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.அமைச்சர் கந்தசாமி: டாக்டர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறாம். நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். கடவுள் தண்டனை தருவார். 4 ஆண்டு காலம் சூடு சொரணை இல்லாமல் இருந்து விட்டோம். இந்த விஷயத்தில் முதல்வரின் பேச்சை கேட்க மாட்டோம். அமைச்சராக இல்லாமல் புதுச்சேரியின் குடிமகனாக செயல்பட தயாராகி விட்டேன். பட்ஜெட்டுக்கு கையெழுத்து போடாவிட்டால் கவர்னர் அலுவலகத்தில் உட்காருவோம். அவருக்கு மக்கள் நலனின் அக்கறை இருந்தால் கவர்னர் மாளிகையை கொரோனா மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.கீதா ஆனந்தன்: கடந்த 3 மாதங்களாக டாக்டர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். டாக்டர்கள் பாதுகாப்பாக உணர்ந்தால்தான் கொரோனாவை தடுக்க முடியும். முதல்வர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் தி.மு.க., உறுதுணையாக இருக்கும்.அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: 33 எம்.எல்.ஏ.,க்களுக்கு செலவு ரூ.10 கோடி மட்டுமே. ஆனால், கிரண்பேடிக்கு செலவு ரூ.10 கோடி. நாங்கள் எங்களது செலவில் பெட்ரோல் போடுகிறோம்; டீ குடிக்கிறோம். இந்த சட்டசபை ஒரு காலத்தில் மருத்துவமனையாக இருந்தது. அவசர நேரத்தில் சட்டசபையை மருத்துவமனையாக மாற்றலாம். மருத்துவமனையாக மாற்றுவதற்கு ராஜ்நிவாசை தர வேண்டும். அவர் பேசிய பேச்சுக்கு டாக்டர்களிடம் நான் மன்னிப்பு கேட்டேன். புதுச்சேரிக்காக மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். போராட்டம் நடத்த வேண்டாம் என புதுச்சேரி மக்களுக்காக கேட்டுக் கொள்கிறேன்.முதல்வர் நாராயணசாமி: அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் அதற்கு தகுந்தாற்போல நடந்து கொள்ள வேண்டும். தவறாக பேசுவதை தவிர்க்க வேண்டும். அரசுடன் கவர்னர் ஒத்துழைக்க வேண்டும். இது, அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம்.சபாநாயகர் சிவக்கொழுந்து: கொரோனா தொற்று பரவி வருகின்ற நேரத்தில் டாக்டர்களையும், சுகாதாரத் துறையினரையும் ஊக்குவிக்க வேண்டுமே தவிர, மன வருத்தம் தரக் கூடாது. ஆகவே, கவர்னர் தான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X