பொது செய்தி

தமிழ்நாடு

காயம் பட்ட மரங்களும்.. கண்ணீர் விடும் எலக்ட்ரீசியனும்..

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement
 காயம் பட்ட மரங்களும்.. கண்ணீர் விடும் எலக்ட்ரீசியனும்..

வத்தலக்குண்டு:மரங்களை பாதுகாக்கும் முயற்சியாக விளம்பர பலகைகளை தொங்கவிட அடித்த ஆணிகளை பிடுங்கி, மரங்களை பாதுகாக்கிறார் வத்தலக்குண்டு எலக்ட்ரீசியன் தங்கப்பாண்டி 33.நெடுஞ்சாலையோர மரங்களில் பல கல்வி, வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பதாகைகளை தாங்கி நிற்கின்றன.

இதற்காக மரங்களின்மீது ஆணிகள் பல அடிக்கப்படுகிறது.மரங்களுக்கும் மனிதர்களைப் போல உயிரும், உணர்வும் உண்டு என யாரும் நினைக்கவில்லை. இதனால் மரங்கள் காலப்போக்கில் பட்டுப் போகும் அபாயம் உள்ளது. இம்மரங்களால் வருவாய் பெறும் நெடுஞ்சாலைத் துறைகூட ஏனோ அதனை கண்டுகொள்வதில்லை.

ஆனால் வத்தலக்குண்டு மேலக்கோயில்பட்டி ஆர்வலர் தங்கப்பாண்டிக்கு இந்த ஆணிகளை பிடுங்குவதே பொழுதுபோக்காக இருக்கிறது. தனது வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் மரங்கள் மீதான ஆணிகளை பிடுங்கி எடுக்கிறார்.அவர் கூறியதாவது: உடலில் காயம் ஏற்பட்டால் மனிதன் அலறித் துடிப்பர். அதுபோலத்தானே தாவரங்களுக்கும் உயிர், உணர்வு உள்ளது. அவற்றை தங்கள் சுயநலத்திற்காக சிலர் காயப்படுத்துகின்றனர்.

கற்பிக்கும் கல்வி நிறுவனங்களே இவ்வாறு செய்வது கண்ணீரை வரவழைக்கிறது. எனவே, என்னால் முடிந்த அளவு வத்தலக்குண்டு பகுதியில் ஆணிகளைப் பிடுங்கி வருகிறேன். இதுவரை 100 மரங்களுக்கு மேல் பிடுங்கி உள்ளேன். சுற்றுச் சூழல் ஆர்வத்தால் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளேன்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X