பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய திறனாய்வு தேர்வுமாவட்டத்தில் முதலிடம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

வடமதுரை:தேசிய அளவில் 2019-2020ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை திட்ட திறனாய்வு தேர்வில் வடமதுரை கலைமகள் மேல்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள் 20 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி எண்ணிக்கையில் மாவட்ட அளவில் இப்பள்ளியே முதலிடம் பெற்றுள்ளது. சத்னறக பி.தீபக் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றார். இம்மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் உதவித்தொகை கிடைக்கும். இம்மாணவர்களை பள்ளித் தாளாளர் ஆர்.கே.பெருமாள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குப்பாச்சி, இயக்குனர்கள் அருள்மணி, சுப்பம்மாள், தலைமை ஆசிரியர் ராமு பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X