பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்போர்ட்ஸ் கோட்டா' சேர்க்கையில் மாற்றம்: சான்றிதழ் அடிப்படையில் தேர்வு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

கோவை:சுயநிதி, தனியார் கல்லுாரிகளில், 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' மாணவர் சேர்க்கை, இம்முறை சான்றிதழ் அடிப்படையில், நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கி உள்ளது.கோவையில் உள்ள சில தனியார் கல்லுாரிகள், இரண்டு வாரங்களுக்கு முன்பே 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' பிரிவில் சேர விருப்பமுடைய மாணவர்களுக்கு, அழைப்பு விடுத்தன.இதில், மாவட்டம், மண்டலம், மாநிலம், தேசிய, ஆசிய போட்டிகளில் சாதனை படைத்த வீரர்கள், தங்களுக்கு பிடித்த கல்லுாரிகளில் சேர ஆன்லைன் வாயிலாக, சான்றிதழ்களை பதிவு செய்தனர்.தற்போதைய சூழலில், மாணவர்களை விளையாட வைத்து, அவர்களின் தனி திறமையை கண்டறிய முடியாது. ஆகவே, சான்றிதழ் அடிப்படையில், முன்னுரிமை அளிக்கப்படுகிறது.பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெயசித்ரா கூறுகையில், ''கடந்த ஆண்டு 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' தேர்வு, மாணவிகளின் சான்றிதழ் மற்றும் விளையாட்டு திறமையின் அடிப்படையில் நடத்தப்பட்டது. இலவச கல்வி வழங்கப்பட்டது. இவ்வாண்டு, ஆன்லைன் முறைக்கு மாறியுள்ளதால், வீரர்களுக்கு போட்டி தேர்வு வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிலர் போட்டிகளில் விளையாடாமல், போலி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது சாதனை படைத்த மாணவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்,'' என்றார்.சி.ஐ.டி., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சம்பத் கூறுகையில், ''தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி, 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' தேர்வு நடத்தப்படும். இன்ஜி., கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள், அண்ணா பல்கலை கலந்தாய்வுக்கு, விண்ணப்பிக்க வேண்டும். தேசிய, மாநில போட்டிகளில், அதிக வெற்றிகள் பெற்ற வீரர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்,'' என்றார்.போலிகள் ஜாக்கிரதை!ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் கீழ், சில மாணவர்கள் சிபாரிசு அடிப்படையில் தேசிய, மாநில சான்றிதழ்களை பெற்று கொண்டு, ஆன்லைன் வாயிலாக பதிவு செய்வதால், திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது. ஆகவே, மாணவர் தேர்வில் கல்லுாரி நிர்வாகங்கள் கவனமாக இருக்க வேண்டும். தகுதியான மாணவர்களுக்கு இடம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X