பொது செய்தி

இந்தியா

குஜராத் சோம்நாத் கோவிலில் பக்தர்களுக்கு பாஸ் முறை அறிமுகம்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சோம்நாத் கோவிலில் கூடிய அதிகமான கூட்டத்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதனையடுத்து பக்தர்களுக்கு பாஸ் முறையை அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.latest tamil newsஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிலும் கடந்தமார்ச் மாதம் 25ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 5 ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரையில் அமலில் உள்ளது.இந்த ஊடரங்கின் போது ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய தளர்வு அறிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக புகழ்பெற்ற சோம்நாத் கோவில் மூடப்பட்டது. தற்போது ஷ்ரவன் மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கோவில் திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்டதும் மக்கள் கூட்டம் அதகரித்து காணப்பட்டது. சமூக இடைவெளி இல்லாமல் கூடிய கூட்டத்தை கண்டு போலீசார் திகைத்தனர். இதனிடையே கோவிலில் உள்ள சந்நதிகளில் ஒரு சில திறக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.


latest tamil newsஇது குறித்து பக்தர்கள் கேள்வி எழுப்பினர். பக்தர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அச்சமயத்தில் பக்தர்களின் தரப்பில் இருந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர் .இதையடுத்து போலீசார் பக்தர்களின் மீது தடியடி நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கோவிலில் நடைபெற்ற சம்பவம் குறித்து அங்கு பதிவாகி இருந்த வீடியோவில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு இருப்பதையும், முக கவசம் அணியாமல் இருப்பதையும் கண்டனர். மேலும் பக்தர்களின் தரப்பில் இருந்து போலீசாா் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் கோவில்நிர்வாகத்தினர் கண்டறிந்தனர்.

தொடர்ந்து கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு சார்பில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப் படுத்தவும் சமூக இடைவெளியை பின்பற்வும்., பாஸ் முறையை நடை முறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் கோவிலை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறக்கட்டளை நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-202012:46:32 IST Report Abuse
Rasheel சோமநாதர் கோவிலில் நடைபெற்ற அந்நிய காட்டுமிராண்டிகள் படை எடுப்பால் நடந்த கொடுமைகளை இணையத்தில் படியுங்கள். என்ன கொடுமைகள்
Rate this:
Cancel
22-ஜூலை-202009:42:31 IST Report Abuse
Rajagopal Srinivasan மய்யம்...மய்யம்...மய்யம்... எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
22-ஜூலை-202008:47:03 IST Report Abuse
Chandramoulli மக்களிடம் நோயின் தீவிரம் பற்றிய பயம் இல்லை . தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வில்லை என்றே தோன்றுகிறது. அரசின் தவறும் உள்ளது. மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X