பொது செய்தி

இந்தியா

தங்க கடத்தல் பணத்தில் மலையாள படங்களுக்கு பைனான்ஸ் செய்த ஸ்வப்னா

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
மலையாள படங்களுக்கு பைனாஸ் செய்த  ஸ்வப்னா:  விசாரணையில் அம்பலம் Faisal Fareed, gold smuggling case, arrested, held, Dubai Police, Kerala Gold Smuggling Case, Dubai

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்ப்னா தங்க கடத்தல் பணத்தில் மலையாள சினிமா படங்களுக்கு பைனானஸ் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


latest tamil news



ஷரித் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாகினர். பெங்களூருவில் பதுங்கியிருந்த இருவரையும் என்.ஐ.ஏ.எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் கைது செய்து கேரளா கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.

அவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவர் துபாயில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஸ்வப்னாவின் சினிமா தொடர்பு அம்பலமாகியுள்ளது.

தங்க கடத்தல் பணத்தைக் கொண்டு 4 மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் ஸ்வப்னா பைனான்ஸ் செய்துள்ளார். ஸ்வப்னாவின் தோழி ஒருவர் தான் இவருக்கு பினாமியாக இருந்துள்ளார் எனவும் அவரிடம் தான் பணம் இருக்கும் எனவும் பைசல் பரீத் கூறியுள்ளார். இதையடுத்து ஸ்வப்னாவின் தோழியிடம் இருந்து ரூ.15 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


ஜாமின் மனு



இந்நிலையில் ஸ்வப்னா தனக்கு ஜாமின் வழங்க கோரி எர்ணாகுளம் சிறப்பு என்.ஐ.ஏ., கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமின் மனு ஜூலை 24-ல் விசாரணைக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஜூலை-202016:51:56 IST Report Abuse
skv srinivasankrishnaveni படிப்பே ஏறலேன்னாலும் புத்தி நன்னா பிழைக்கும் வழியை கண்டுபிடிச்சுருக்கு
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
22-ஜூலை-202020:30:42 IST Report Abuse
Ramona மையம் ஓனர் என்ன அரிச்சந்திரனா?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஜூலை-202019:09:49 IST Report Abuse
Endrum Indian இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்த்தால் ஐ எஸ் ஐ எஸ் க்கு கூட நிதி உதவி மற்றும் ஆட்களை தேர்ந்தெடுப்பதில் அவர்களை ஐ எஸ் ஐ எஸ் ல் சேர்ப்பதில், லவ் ஜிஹாதில் என்று எல்லா விஷயத்திலும் மெது மெதுவாக வெளியில் வரும். இது கம்யூனிஸ்ட் பினராயி விஜயனுக்கு தெரியாமல் நடப்பது?? அப்படித்தானே?? 10 ஆவது படித்தாலும் பயங்கர சமர்த்து தான் இந்த விவாகரத்து வாங்கின குழந்தை. பெண்களுக்கு சரி சம உரிமை இது தான்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X