தங்க கடத்தல் பணத்தில் மலையாள படங்களுக்கு பைனான்ஸ் செய்த ஸ்வப்னா | Faisal Fareed, third accused in gold smuggling case, arrested by Dubai Police | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தங்க கடத்தல் பணத்தில் மலையாள படங்களுக்கு பைனான்ஸ் செய்த ஸ்வப்னா

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (37)
Share
மலையாள படங்களுக்கு பைனாஸ் செய்த  ஸ்வப்னா:  விசாரணையில் அம்பலம் Faisal Fareed, gold smuggling case, arrested, held, Dubai Police, Kerala Gold Smuggling Case, Dubai

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்ப்னா தங்க கடத்தல் பணத்தில் மலையாள சினிமா படங்களுக்கு பைனானஸ் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


latest tamil newsஷரித் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாகினர். பெங்களூருவில் பதுங்கியிருந்த இருவரையும் என்.ஐ.ஏ.எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் கைது செய்து கேரளா கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.

அவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவர் துபாயில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஸ்வப்னாவின் சினிமா தொடர்பு அம்பலமாகியுள்ளது.

தங்க கடத்தல் பணத்தைக் கொண்டு 4 மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் ஸ்வப்னா பைனான்ஸ் செய்துள்ளார். ஸ்வப்னாவின் தோழி ஒருவர் தான் இவருக்கு பினாமியாக இருந்துள்ளார் எனவும் அவரிடம் தான் பணம் இருக்கும் எனவும் பைசல் பரீத் கூறியுள்ளார். இதையடுத்து ஸ்வப்னாவின் தோழியிடம் இருந்து ரூ.15 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


ஜாமின் மனுஇந்நிலையில் ஸ்வப்னா தனக்கு ஜாமின் வழங்க கோரி எர்ணாகுளம் சிறப்பு என்.ஐ.ஏ., கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமின் மனு ஜூலை 24-ல் விசாரணைக்கு வருகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X