பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவர் அறிவுரை பின்பற்றினால்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

''ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட கொரோனா தடுப்பு மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனை பெற்ற பிறகே, எடுத்துக்கொள்ள வேண்டும்,'' என்று கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இருதயநல சிறப்பு மருத்துவர் மணிகண்டன் கூறினார்.கொரோனா தொற்று, இதயத்தை பாதிக்குமா?கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு, மாரடைப்பு அல்லது இருதய தசைகள் செயலிழப்பு( heart failure) ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயது முதிர்ந்தவர்கள் மட்டுமல்லாது, இளம் வயதினருக்கும் வர வாய்ப்பு உள்ளது. இதய நோய் உள்ளவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.இதயநோயாளிகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை, கொரோனா தடுப்புக்கு எடுத்துக்கொள்ளலாமா?ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் arrhythmia ஆகிய மாத்திரைகள், பல சூழ்நிலைகளில், இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் இதயநோயாளிகள் டாக்டரின் ஆலோசனை பெற்ற பிறகே, இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.கொரோனா காலத்தில் இதய நோயாளிகள், பின்பற்ற வேண்டியவை என்ன? அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுவதோடு, வீட்டிலிருந்தவாறு உடலின் வெப்பநிலை மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு, உடலின் ஆக்சிஜன் அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு இருந்தால் பயப்படத் தேவை இல்லை.சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி முக்கியம். டாக்டரின் ஆலோசனை பெற்று, மருந்துகளை தவறாமல் உட்கொண்டு, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X