பொது செய்தி

தமிழ்நாடு

முதல்ல வேலையை பாருங்க! தூய்மை பணியாளர்களுக்கு... மாநகராட்சி கமிஷனர் கண்டிப்பு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

கோவை மாநகராட்சியில், 4,000க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். வழக்கமாக, காலை, 5:45 முதல், 10:45 மணி வரை; பிற்பகல், 2:45 முதல், 5:45 மணி வரை, இரு 'ஷிப்ட்'டுகளாக பணிபுரிய வேண்டும்.நகர் பகுதிக்குள் துாய்மை பணியாளர்கள் வசித்தபோது, இரு 'ஷிப்ட்'டுகளாக பணியாற்றினர். வெள்ளலுார், மலுமிச்சம்பட்டி, கீரணத்தம் என, புறநகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றதால், அவர்களால், இரு நேரமும் வந்து செல்ல முடிவதில்லை.அதனால், கடந்த சில ஆண்டுகளாக, காலை, 6:00 முதல் மதியம், 12:00 மணி வரை பணிபுரிகின்றனர். சில தொழிலாளர்கள், வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, சென்று விடுகின்றனர். சிலர், வெவ்வேறு கம்பெனிகளில் கூலி தொழிலாளர்களாகவும், ஆட்டோ டிரைவர்களாகவும் பணிபுரிகின்றனர்.வேலைக்கே வராமல், மாதம் தவறாமல் சம்பளம் பெறும் தகவல், மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.தொழிலாளர்கள் அதிருப்திஅவர், காலை நேரத்தில் கள ஆய்வுக்குச் செல்லும்போது, வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்தார். உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும், இரு 'ஷிப்டு'களும் கண்டிப்பாக பணிபுரிய வேண்டும். அவர்களிடம் வேலை வாங்க வேண்டியது, சுகாதார ஆய்வாளர்கள் பொறுப்பு என, கமிஷனர் உத்தரவிட்டார். இது, தொழிலாளர்கள் மத்தியில் புகைச்சலை கிளப்பியது.தற்போது பொது போக்குவரத்து தடை செய்திருப்பதால், புறநகரில் இருந்து இரு நேரமும் பணிக்கு வர முடியாத சூழல் இருப்பதையும், காலை, 6:00 முதல், மதியம், 12:00 வரை பணிபுரிவோம் என்றும், கோயம்புத்துார் லேபர் யூனியன் ஜீவா முனிசிபல் தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,), தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கம், ஜனசக்தி லேபர் யூனியன் நிர்வாகிகள், கமிஷனரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.வேலைக்கு தயங்காதே!அதற்கு மாநகராட்சி கமிஷனர், 'கொரோனா' தொற்று பரவாமல் இருக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் துாய்மை பணியாளர்கள், காலை, 6:00 முதல் மதியம், 12:00 மணி வரை தயக்கமின்றி பணிபுரிய வேண்டும். முக கவசம், கையுறை, காலுறை மற்றும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்; கிடைக்கவில்லையெனில், அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வண்ணம், கவனமாக செயல்பட வேண்டும்' என கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, துாய்மை தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், 'வேலை செய்யாமல், சம்பளம் வாங்கும் தொழிலாளர்களை கண்டறியவும், லஞ்சம் வாங்கிக் கொண்டு, அத்தகைய தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கமிஷனர் முயற்சி செய்கிறார்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X