பொது செய்தி

தமிழ்நாடு

பரிசோதனையின்றி வரும் வடமாநிலத்தவரால் ஆபத்து

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

மதுக்கரை:தனியார் தொழிற்சாலையில் பணிபுரிய வந்த, பீகாரை சேர்ந்த ஆறு பேருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.மதுக்கரை ஒன்றியத்துக்குட்பட்ட, சீரபாளையம் ஊராட்சியில், தனியார் தொழிற்சாலை கட்டுமான பணியில் ஈடுபட, பீகாரை சேர்ந்த 12 பேர், கடந்த வாரம் இங்கு வந்தனர்.இதனையறிந்த ஊராட்சி மன்ற தலைவர், சுகாதார துறைக்கு தகவல் தெரிவித்தார். 12 பேருக்கும் சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. ஆறு பேருக்கு தொற்று உறுதியானது.மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்டோருக்கும், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டது.பரிசோதனையின்றி வருகைகொரோனா தொற்றால், மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை, போடிபாளையம், சீரபாளையம், ஒத்தக்கால் மண்டபம், மலுமிச்சம்பட்டி என பல்வேறு இடங்களிலும், வட மாநிலத்தவர் தங்கியிருந்தனர்.தொற்று பீதியால், பெரும்பாலானோர் சொந்த ஊர் சென்ற இவர்கள், தற்போது முறையான அனுமதியின்றி (இ -- பாஸ்) தமிழகம் வருகின்றனர். இவர்களால் மற்றவர்களுக்கு, தொற்று பரவும் அபாயம் உள்ளது. உரிய பரிசோதனைக்கு உட்படுத்தாமல், இவர்களை அழைத்து வருவோர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X