சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பு கடித்து சிறுமி பலி

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:சிவகங்கை மாவட்டம், கீழடியை சேர்ந்தவர் சின்னக்கருப்பன். இவர் சின்னதடாகத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சுமதி,7. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுவிரியன் பாம்பு சிறுமியின் கை பெருவிரலை கடித்தது. சிறுமி சின்ன தடாகத்தில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேல்சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X