கள்ளக்காதல் தகராறில் சகலை வெட்டிக் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதல் தகராறில் சகலை வெட்டிக் கொலை

Added : ஜூலை 22, 2020
Share

துாத்துக்குடி;கள்ளக்காதல் தகராறில் சகலைப்பாடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். துாத்துக்குடி, கே.டி.சி.நகரில் வசிப்பவர் பிரேம்குமார் 29. ஆட்டோ தொழிலாளி. மனைவி கவுசல்யா 25. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கவுசல்யாவின் உடன் பிறந்த சகோதரி மகேஸ்வரி. கணவர் விக்னேஷ்வரனுடன் டூவிபுரத்தில் வசிக்கிறார். மகேஸ்வரிக்கும் பிரேம்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. விக்னேஷ்வரன் கண்டித்தார். நேற்றும் பிரேம்குமார் தம் வீட்டுக்கு வந்துசென்றதை அறிந்தார். இரவு 8:00 மணியளவில், அரிவாளுடன் பிரேம்குமார் வீட்டிற்கு சென்றார்.வெளியே வரவழைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். எஸ்.பி.,விஜயகுமார், சிப்காட் போலீசார் விசாரித்தனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X