அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

கோவை:'சென்னையை தொடர்ந்து, கோவையிலும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தமிழகத்தில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 726 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். கோவையில் இதுவரை, ஒரு லட்சத்துக்கு 69 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது, 806 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, சிகிச்சை மையங்கள் என, 4,685 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கோவை அரசு மருத்துவமனையில், சென்னைக்கு அடுத்தபடியாக, 'லினியர் ஆக்ஸிமீட்டர்' என்ற அதிநவீன கருவி அமைக்கப்பட்டுள்ளது. 'ஹைபிளோ ஆக்சிஜன் நெசல் கெனுலா' எனும் கருவி 'வெண்டிலேட்டர்' கருவியை காட்டிலும் சிறப்பான செயல்பாடு உள்ளதால், கொள்முதல் செய்யப்படவுள்ளது.சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாவை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார். 'சித்த மருத்துவ சிகிச்சை'உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறுகையில்,''கோவையில், 5,000 மருத்துவ முகாம் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 4,165 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 10 லட்சம் குடும்பங்களுக்கு, சுபகுடிநீர், ஆர்சானிக் ஆல்பம், மல்டி விட்டமின், ஜிங்க் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. கொடிசியா பிரத்யேக மையத்தில், 34 பேருக்கு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X