அரசு மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் ஆய்வு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் ஆய்வு

Added : ஜூலை 22, 2020
Share
 அரசு மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் ஆய்வு

கோவை:கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.கோவை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு ரூ.25 கோடி மதிப்பில், நவீன கதிரியக்க இயந்திரத்துடன், கூடிய சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், சிகிச்சை மையத்தின் செயல்பாடுகளை நேற்று பார்வையிட்டார்.அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,''நவீன கதிரியக்க இயந்திர செயல்பாடுகள் குறித்து டாக்டர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கருவி, அதிநவீன கதிர்வீச்சை செலுத்தி புற்றுநோயை குணப்படுத்தக் கூடியது. எவ்வகை புற்றுநோயாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். 21 நபர்களுக்கு சோதனை அடிப்படையில், பரிசோதனை நடந்து வருகிறது. அரசு மருத்துவமனையில் இச்சிகிச்சை மேற்கொள்ளும்போது, காப்பீட்டு திட்டத்தில், இலவசமாக பெற முடியும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X