பொது செய்தி

தமிழ்நாடு

பிரசவ உதவியாளர் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

ஈரோடு: பிரசவ உதவியாளர்களுக்கு, ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி, தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர் (ஆர்.சி.எச்., ஒர்கர்ஸ்) சங்கத்தின், மாநில தலைவர் சண்முகம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிரசவ உதவியாளர்கள் உள்ளனர். இவர்கள் தினமும், 12 மணி நேரம் பணி செய்கின்றனர். இவர்களது தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்ற வேண்டும். இதுகுறித்து அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறோம். அரசு சார்பில் பரிசீலித்து வருவதாக கூறுகிறது. மாவட்டத்தில் பிற தினக்கூலி தொழிலாளர்களுக்கு, கலெக்டர் நிர்ணயம் செய்த தினக்கூலியை, இவர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X