ரூ.16 லட்சத்துக்கு தே.பருப்பு ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.16 லட்சத்துக்கு தே.பருப்பு ஏலம்

Added : ஜூலை 22, 2020
Share

மொடக்குறிச்சி: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 17 ஆயிரத்து, 374 கிலோ வரத்தானது. முதல் தரம் ஒரு குவிண்டால், 9,569, ரூபாய் முதல், 9,880, ரூபாய் வரை விலை போனது. இரண்டாம் தரம், 6,703 ரூபாய் முதல், 9,563, ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 16 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வார ஏலத்தை ஒப்பிடுகையில், குவிண்டாலுக்கு, 69 ரூபாய் விலை சரிந்தது. இதேபோல் தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 8,203 தேங்காய்கள் வரத்தாகின. ஒரு டன், 25 ஆயிரத்து, 550 ரூபாய் முதல், 29 ஆயிரத்து, 360 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட, டன்னுக்கு, 740 ரூபாய் விலை குறைந்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X