பொது செய்தி

தமிழ்நாடு

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 249 பேர் தேர்ச்சி: பவானிசாகர் மாணவி மாநிலத்தில் 2வது இடம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி தொகை தேர்வில் (என்.எம்.எம்.எஸ்., தேர்வு), 249 பேர் தேர்ச்சி பெற்றனர். மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால், மாதம், 1,000 ரூபாய் வீதம், பிளஸ் 2 முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். நடப்பாண்டு தேர்வு கடந்த ஆண்டு டிச.,15ல் தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில், 18 மையங்களில், 4,824 பேர் எழுதினர். தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் மாவட்டத்தில், 249 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெருந்துறை வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளி, ஏழாவது ஆண்டாக, மாவட்டத்தில் முதலிடம் பிடித்தது.

* பவானிசாகர் அருகே கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர், நிர்மலாதேவி, பரமேசன், அஸ்விதா, அனிதா, கோகுல் பிரசாத், சுவேந்திரன், கதிர்வேல், சுதர்சன், அபர்ணா, மெய்யப்பன் ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். மாணவி நிர்மலாதேவி, 140 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாமிடம், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X