ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு தொற்று

Added : ஜூலை 22, 2020
Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக, மூவருக்கு தொற்று உறுதியானது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று, ஈரோடு மூலப்பாளையம், முனிசிபல் சத்திரம், அகில்மேடு வீதி ஆகிய இடங்களில் இரு ஆண், ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதித்தோர் எண்ணிக்கை, 512 ஆக உயர்ந்தது. இதில், 377 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; 127 பேர் சிகிச்சையில் உள்ளனர். எட்டு பேர் இறந்து விட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X