பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உதவி மருத்துவருக்கு தொற்று: குடும்பத்தினர் 8 பேர் தனிமை

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

தம்மம்பட்டி: அரசு உதவி மருத்துவருக்கு, கொரோனா உறுதியானதால், 18 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, தம்மம்பட்டி, காந்தி நகரைச் சேர்ந்தவர், 39 வயது ஆண்; நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய, உதவி மருத்துவர். காய்ச்சல் இருந்ததால், கடந்த, 17ல், மருத்துவ பரிசோதனை செய்தபோது, நேற்று முன்தினம், கொரோனா இருப்பது உறுதியானது. அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோர், மனைவி, இரு குழந்தைகள், சகோதரி உள்பட குடும்பத்தினர் எட்டு பேருக்கு, பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உதவி மருத்துவர், உடையார்பாளையத்தில், தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இதனால், அங்கு பணிபுரியும், மருத்துவ பணியாளர், மருந்தக, ஆய்வக பணியாளர் என, 10 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தவிர, மருத்துவமனை, மருந்தகம், ஆய்வகத்துக்கு வந்து சென்றவர்களை கண்டறிந்து, மருத்துவ பரிசோதனை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும், காந்தி நகர், உடையார்பாளையம் பகுதிகளில், தம்மம்பட்டி பேரூராட்சி, சுகாதாரத்துறையினர், நோய் தடுப்பு பணி மேற்கொண்டனர்.

ஆத்தூர் சுகாதார மாவட்டம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, உமையாள்புரம், முருகன் கோவில் அடிவாரம் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 46, 26 வயது ஆண்கள், 2 வயது ஆண் குழந்தை; 30, 25, 17 வயது பெண்கள், 8, 3 வயது பெண் குழந்தைகள் என, எட்டு பேருக்கு, நேற்று, கொரோனா உறுதியானது. ஆத்தூர் அருகே, கீரிப்பட்டியில், 20 வயது ஆண்; நரசிங்கபுரம், 39 வயது ஆண்; அப்பமசமுத்திரம், 29 வயது ஆண்; கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், நடூரைச் சேர்ந்த, 50 வயது ஆண், அவரது, 45 வயது மனைவி, வாழப்பாடி, முத்தம்பட்டி, 60 வயது பெண்; தலைவாசல், புளியங்குறிச்சி, 22 வயதுடைய கர்ப்பிணி ஆகியோருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 15 பேருக்கு, தொற்று உறுதியாகி, ஆத்தூர், சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X