பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

சேலம்: தமிழகத்தில், அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக கூறி, தி.மு.க., சார்பில், நேற்று, மாநிலம் தழுவிய கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, எம்.பி., பார்த்திபன் உள்ளிட்டோர், தங்கள் வீடுகள் முன், கறுப்புக்கொடி ஏற்றி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அக்கட்சியினர், அ.தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர். கேரளா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களை போல், மின் கட்டண சலுகை வழங்க வலியுறுத்தினர்.


162 பேர் மீது வழக்கு: ஆட்டையாம்பட்டியில், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகபிரகாஷ் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், ஊரடங்கை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல், ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன், ராஜாபாளையம், இனாம் பைரோஜி ஆகிய இடங்களிலும், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 100க்கும் மேற்பட்டோர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.


* ஆத்தூர், உடையார்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தால், முன்னாள் கவுன்சிலர் ஸ்டாலின் உள்பட, 10 பேர் மீது, ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர். அதேபோல், கெங்கவல்லியில், ஒன்றிய பொறுப்பாளர் அகிலன், பேரூர் பொறுப்பாளர் பாலமுருகன் உள்பட, 40 பேர் மீது, கெங்கவல்லி போலீசார், வழக்குப்பதிந்தனர். தலைவாசலில், ஒன்றிய பொறுப்பாளர் மணி உள்பட, 12 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X