பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு, காடையம்பட்டியில் சி.இ.டி.பி., அமைக்கும் பணி மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது: கருப்பணன்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

ஈரோடு: ''சாய, சலவை, தோல் ஆலை கழிவுகளை ஒரே இடத்தில் சுத்திகரிப்பு செய்யும் வகையிலான, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (சி.இ.டி.பி.,) ஈரோடு மற்றும், காடையம்பட்டியில் அமைக்கும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
ஈரோட்டில் அமைச்சர் கருப்பணன் கூறியதாவது: ஈரோடு பகுதியில், சாய ஆலை-108, சலவை ஆலை-240 என, 248 ஆலைகளும், தோல் ஆலை, 29 என உள்ளன. சில நேரம் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் ஆலைகள் மீது, மின் இணைப்பு துண்டிப்பு, ஆலையை சீல் வைத்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு விதி மீறலுக்காக, 1.31 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, ஈரோட்டில், வைராபாளையம் பகுதியில் ஆலை நிர்வாகங்கள் சார்பில், 29 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளனர். அங்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நான்கு யூனிட் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும், ஒரு அடர் கழிவு மேலாண்மை அமைப்பும் (சி.ஆர்.எம்.எஸ்.,) அமைய உள்ளது. இதற்கு, 750 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுபோல, பவானி, காடையம்பட்டியில், மூன்று பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு இடம் வாங்கி, மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்துள்ளோம். இப்பணி செயல்பாட்டுக்கு வரும்போது, ஒவ்வொரு ஆலையிலும் வெளியாகும் கழிவு நீர், குழாய் மூலம் நேரடியாக, சி.இ.டி.பி.,க்கு கொண்டு வரப்பட்டு, சுத்திகரிப்பு செய்து, மறுபயன்பாட்டுக்கான நீரை, மற்றொரு குழாய் மூலம் அதே ஆலைக்கு வழங்கப்படும். தற்போது, ஒரு ஆலை, ஒரு மீட்டர் துணியை சுத்திகரிக்க ஆகும் செலவைவிட, சி.இ.டி.பி.,யில் மொத்தமாக சுத்திகரிக்கும்போது, 50 சதவீதத்துக்கு மேல் செலவு மிச்சமாகும். ஆலைக்கு லாபம் என்பதுடன், ஒரு சொட்டு கழிவு நீர் கூட வெளியேறாது. திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் இத்திட்டம் செயல்பட்டு, நல்ல பலன் தருகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, கழிவு நீரால் வரும் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X