சட்ட அமைச்சர் செய்ய வேண்டியதுதானே...| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

சட்ட அமைச்சர் செய்ய வேண்டியதுதானே...

Updated : ஆக 18, 2020 | Added : ஜூலை 22, 2020
Share
சட்டம், அமைச்சர்

'நீங்கள் சட்ட அமைச்சர்; அதிகாரம் இருக்கிறது; நியாயமாக இருந்தால் செய்ய வேண்டியது தானே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் பேட்டி:

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த விவகாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அமைதியாக இருக்கிறார். அவரின் மவுனத்தை பார்த்தால், அக்கட்சியின் மீது சந்தேகமாக இருக்கிறது. தி.மு.க.,வையும் இவ்விவகாரத்தில் விசாரிக்க வேண்டும்.

'சரியாக சொல்கிறீர்கள்; சட்டம் அவசியம் தான்...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக காங்., விவசாய பிரிவு மாநில செயலர் ராஜ்குமார் பேச்சு:

மதங்கள் பற்றியோ, கடவுள் குறித்தோ அவதுாறாக பேச, யாருக்கும் உரிமையில்லை. நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் இதுபோன்ற செயல்களை, அரசு அனுமதிக்கக் கூடாது.

'நியாயமான கோரிக்கை தான். முழு உடல் தகுதி இருப்பவர்களே, குடும்பத்தை நடத்த தள்ளாடும் போது, மாற்றுத்திறனாளிகள் நிலை பரிதாபம் தான்...' என, கூற வைக்கும் வகையில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி அறிக்கை:

தமிழகம் முழுதும் காப்பகங்களில், 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்; உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு சிரமப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு, அரசு வழங்கும் உணவூட்டு தொகையை இரட்டிப்பாக்க வேண்டும்.

'பள்ளிகள் துவங்கட்டும்; வகுப்புகள் நடைபெறட்டும்; அதன்பின், உங்கள் கோரிக்கை ஏற்கப்படலாம்...' என, நெத்தியடியாக கூற வைக்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை:


latest tamil news
அரசு பள்ளிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும், நிரந்தரப்படுத்த வேண்டும். அவர்களுக்கு, ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிவாரணமாக வழங்க வேண்டும்.

'கொஞ்ச நாட்களுக்கு, இதுபோன்ற, அல்லரை, சில்லரை கோரிக்கைகளை வலியுறுத்தாதீர்கள்...' என, கண்டிக்கத் துாண்டும் விதத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலர் காமராஜ் பாண்டியன் அறிக்கை:

நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற சம்பளம் மற்றும் இதர படிகள், ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

'நடக்கிற விஷயத்தை பேசுங்க சார்; ரொம்ப வித்தியாசமாக சிந்திக்காதீர்கள்...' என, அறிவுரை கூறத் துாண்டும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:

கல்விக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே, பாடப்புத்தகம் வழங்க, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குவது போல், தனியார் பள்ளி மாணவர்களுக்கும், இலவச புத்தகங்கள் வழங்க வேண்டும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X