பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 172 மி.மீ., மழை பதிவு: குளிர்ந்த காற்று வீசியதால் மகிழ்ச்சி

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

நாமக்கல்: மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம், 172 மி.மீ., மழை பதிவானது. குமாரபாளையத்தில், அதிகபட்சம், 68.60 மி.மீ., பெய்தது.


நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயில் கடுமையாக இருப்பதால், மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். அதன் காரணமாக, சிறுவர் முதல், முதியவர் வரை அனைவரும் வெளியே வரமுடியாமல், வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். தற்போது, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப் படுத்துவதற்காக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், லேசாகவும், பல பகுதிகளில் கனமாகவும் பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கோடைமழை பெய்ததையடுத்து, குளிர்ந்த காற்று வீசியது. அதனால், மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதிகபட்சமாக, குமாரபாளையத்தில், 68.60 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,): குமாரபாளையம், 68.60, ப.வேலூர், 25, ராசிபுரம், 16.40, சேந்தமங்கலம், 9.20, திருச்செங்கோடு, 45, கொல்லிமலை, 8 என, மாவட்டம் முழுவதும், 172.20 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X