சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்க மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்க மானியம்

Added : ஜூலை 22, 2020
Share

நாமகிரிப்பேட்டை: பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில், நடப்பு ஆண்டில் விவசாயிகள் சொட்டு நீர், தெளிப்புநீர், மழைத்தூவான் போன்ற பாசன அமைப்புகள் அமைக்க, 375 ?ஹக்டேருக்கு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு, மக்காச்சோளம், தென்னை, பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள், பயறு வகை பயிர்கள் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் இத் திட்டத்தில் பயன் பெறலாம். நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து, விழிப்புணர்வு கூட்டங்கள் நடந்து வருகிறது. நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், சிறு,குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மேலும், நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில், பாசன குழாய்கள் கொள்முதல் செய்ய அதிகபட்சம், 10 ஆயிரம், மின் மோட்டார் அல்லது டீசல் பம்ப்செட் அமைக்க அதிகபட்சம், 15 ஆயிரம், பாதுகாக்கப்பட்ட வேலிக்குட்பட்ட தரை நிலை நீர் தேக்கத் தொட்டி அல்லது செங்கல் கட்டுமானத்தில் அமைத்து கொள்ள, 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X