பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 40 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் என்.சி.எம்.எஸ்.,சில் நடந்த ஏலத்தில், 40 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. நாமக்கல், தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் பகுதியில் இருந்தும், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 3,400 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆர்.சி.?ஹச்., ரகம், குவின்டால், 4,240 முதல், 4,802 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின. திருப்பூர், சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். ஏலத்தில் பங்கேற்க வந்த அலுவலர்கள், விவசாயிகள், வியாபாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பருத்தி கொண்டு வரப்பட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X