பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுக்க தரகம்பட்டியில் ஊரடங்கு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

குளித்தலை: தரகம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த, வியாபாரிகள், பொது மக்கள் ஆலோசனை கூட்டத்தில், காலை, 6:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை மட்டுமே, கடைகள் செயல்படும் என, முடிவு செய்யப்பட்டது. குளித்தலை அடுத்த, தரகம்பட்டி தாலுகா அலுவலகத்தில், கொரோனா பரவல் தடுக்கும் வகையில் வியாபாரிகள், பொது மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். இதில், தரகம்பட்டி பஞ்., பகுதியில் கொரோனா பரவல் பயம் காரணமாக, வியாபாரிகள், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வரும், 25 வரை காலை, 6:00 மணியிலிருந்து, மதியம், 12:00 மணி வரை மட்டுமே, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட வேண்டும்; இதனால் தொற்றும் குறையும் என, முடிவு செய்யப்பட்டது. தாசில்தார் மைதிலி மற்றும் யூனியன் குழு தலைவர், பஞ்.,தலைவர், மக்கள் பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X