பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020
Share
Advertisement
தமிழகம், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, குழு பரிசோதனை, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, tn govt

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு பரிசோதனை முறை என்பது 10 பேரின் ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என வந்தால், அவர்களின் முடிவு ஒரே நேரத்தில் கிடைக்கும். தொற்று இருக்கும்பட்சத்தில் மீண்டும் அவர்களை தனித்தனியே பரிசோதனை செய்ய முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news



இந்த முயற்சியால், அதிகளவு பரிசோதனை மேற்கொள்ள முடியும். தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு குழு பரிசோதனை செய்வதன் மூலம், அவர்களுக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பதை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X