சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளத்தில் விசாரணை நடத்திய இரு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருநெல்வேலி: சாத்தான்குளம் வழக்கில் போலீசார்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், ஜூன் 19ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், 60; மகன் பெனிக்ஸ், 31 ஆகியோர், போலீஸ் தாக்குதலில் இறந்தனர். இது தொடர்பாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்,
சாத்தான்குளம், சிபிஐ, அதிகாரிகள், கொரோனா, தந்தைமகன், CBI officers, investigating, Sathankulam case, tests positive, coronavirus positive, cbi, tamil nadu

திருநெல்வேலி: சாத்தான்குளம் வழக்கில் போலீசார்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், ஜூன் 19ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், 60; மகன் பெனிக்ஸ், 31 ஆகியோர், போலீஸ் தாக்குதலில் இறந்தனர். இது தொடர்பாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸ்காரர்கள் என, 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், போலீசாரிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதியானதால், மற்ற சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானதால் விசாரணையில் உள்ள 3 போலீசாரையும் ஒருநாள் முன்னதாகவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் போலீசார் மூவருக்கும் ஆக.,5ம் தேதி வரையில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
22-ஜூலை-202021:08:22 IST Report Abuse
Chandramoulli தவறுகள் மறைக்க பட முயற்சி என்று தான் தோன்றுகிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்தவர் தி மு க வை கடுமையாக தாக்கி பேசியதின் விளைவோ என்னவோ
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
22-ஜூலை-202016:17:58 IST Report Abuse
Visu Iyer இந்த வழக்கை எடுப்பவர்களுக்கு கொரானா வரும் என்பது போல தான் பார்த்ததும் நினைத்தேன்.. அப்புறம் தான் செய்திகளை படித்து புரிந்து கொண்டேன்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஜூலை-202016:16:56 IST Report Abuse
Lion Drsekar மக்கள் எப்போதும் போல் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள், கேரளாவில் யானையைக் கொன்றவனைக் கைது செய்தது போல் வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X