கொரோனாவின் போர்க்களமாக மாறும் சின்ஜியாங் மாகாணம்: சீனா கலக்கம்| China's Xinjiang province declared as 'wartime situation' after sudden spike in COVID-19 cases | Dinamalar

'கொரோனாவின் போர்க்களமாக மாறும் சின்ஜியாங் மாகாணம்': சீனா கலக்கம்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (13)
Share
பீஜிங்: 'சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது' என, சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதத் துவக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், சீனத் தலைநகர் பீஜிங் அருகேயுள்ள அக்சின்

பீஜிங்: 'சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது' என, சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.latest tamil news
கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதத் துவக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், சீனத் தலைநகர் பீஜிங் அருகேயுள்ள அக்சின் என்ற பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் துவங்கியது. அங்குள்ள ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பீஜிங்கில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


போர்க்காலச் சூழல்


சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், சின்ஜியாங் மாகாணத்தில் புதிதாக, 9 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. சின்ஜியாங் மாகாணத்தில் இதுவரை, 64 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 69 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், உரும்க்யூ நகரிலும் 14 பேருக்கு எந்தவித அறிகுறியும் இன்றி, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சின்ஜியாங் மாகாணத்தில் தற்போது போர்க்காலச் சூழல் நிலவுகிறது. கொரோனா பரவலின் மையமாக சின்ஜியாங் மாகாணம் மாறியுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news'சின்ஜியாங் மாகாணத்தில் எந்த அறிகுறியும் இல்லாமல் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால், வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படக்கூடும்' என, வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கலக்கமடைந்துள்ள சீன சுகாதாரத் துறையினர், சின்ஜியாங் மாகாணத்தில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X