தலைமை நீதிபதி குறித்து டுவீட்: பிரஷாந்த் பூஷணுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: தலைமை நீதிபதி பாப்தே குறித்து டுவீட் செய்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் மற்றும் டுவீட்டர் நிறுவனத்திற்கு அவமதிப்பு நோட்டீஸ், அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஆக.,5க்கு ஒத்திவைத்தது.நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பிஆர் கவாய் மற்றும்
தலைமை நீதிபதி, டுவீட், பிரஷாந்த் பூஷண், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்,சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், நோட்டீஸ், Contempt case, SC, supreme court, Prashant Bhushan, Twitter, tweets

புதுடில்லி: தலைமை நீதிபதி பாப்தே குறித்து டுவீட் செய்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் மற்றும் டுவீட்டர் நிறுவனத்திற்கு அவமதிப்பு நோட்டீஸ், அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஆக.,5க்கு ஒத்திவைத்தது.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பிஆர் கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி அடங்கிய அமர்வு, தலைமை நீதிபதி பாப்டே குறித்து பிரஷாந்த் பூஷண் செய்த டுவீட் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள், இந்த டுவீட்கள் குறித்து, நிர்வாக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டோம். இந்த விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், பிரஷாந்த் பூஷண் மற்றும் டுவிட்டர் நிறுவனம் தங்களது தரப்பு விளக்கத்தை தெரிவிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஆக.,5க்கு ஒத்திவைத்தனர்.


latest tamil news
இந்த வழக்கில் டுவிட்டர் இந்தியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஙர் சஜன் பூவவ்யா கூறுகையில், டுவீட்டரை, தங்களது தாய் நிறுவனமான டுவீட்டர் (twitter Inc) தான் கட்டுப்படுத்துகிறது. இதனால், நோட்டீஸ் அவர்களுக்கு தான் அனுப்ப வேண்டும். தங்களுக்கு அல்ல என தெரிவித்தார். இதனை நீதிபதிகள் ஏற்று கொண்டார்.

மேலும் சஜன் கூறுகையில், குறிப்பிட்ட டுவீட்களை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை. ஊக்கப்படுத்தவும் இல்லை. அதனை முடக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.


மற்றொரு வழக்கு

பிரஷாந்த் பூஷண் மீதான மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள்(ஜூலை 24) அன்று விசாரணைக்கு வர உள்ளது. அதனை மேற்கண்ட நீதிபதிகள் அமர்வே விசாரிக்க உள்ளது.
கடந்த 2009ல் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் சார்பில் ஹாரீஸ் சால்வே ஆஜரானார். இந்த வழக்கில் ஆஜரான அவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை பூஷண் தெரிவித்ததாக புகார் கூறினார்.


latest tamil newsஇதனை விசாரித்த நீதிமன்றம் கூறுகையில், நீதித்துறை மீதும், நீதிபதிகள் மீதும் எந்தவித ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டுகளை டிவி நிகழ்ச்சியில் பூஷண் தெரிவித்ததை ஹாரீஸ் சால்வே நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத்தில் கடைசியாக தலைமை நீதிபதி பதவி வகித்த 16 பேரில் பாதி பேர் மீது ஆதாரமில்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகளை பூஷண் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி எஸ்எச் கபாடியா மீதும் புகார் தெரிவித்தார் என தெரிவித்தனர்.

அப்போது பிரஷாந்த் பூஷண் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, பூஷண் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வராது என்றார். ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தனர். ஆனால். 2010க்கு பிறகு அந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அச்சம் தவிர் தமிழா அடங்க மறு வீறு கொள் வெற்றி நமதே அடைவது 2010 இல் உள்ள கேஸ் இப்போ சிறப்ப இருக்கு
Rate this:
Cancel
22-ஜூலை-202020:25:39 IST Report Abuse
Ganesan Madurai ஆம் ஆத்மி பார்டிக்குள் ஒரு கம்யூனிஸ்ட் ஏஜன்ட்
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
22-ஜூலை-202020:17:25 IST Report Abuse
K.n. Dhasarathan ட்வீட் போட்டது தப்பு என்றால் அதுபோல் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள தக்கதா ? ஒரு தலைமை நீதிபதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தானாக தெரியாதா ?
Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-202008:30:17 IST Report Abuse
Sivramkrishnan GkWhat is the tweet ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X