பொது செய்தி

இந்தியா

ராமர் கோயில்: ஆக.,5ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
அயோத்தி, ராமர்கோயில், மோடி, அடிக்கல், நாட்டுகிறார், PM Modi, lay foundation stone, Ram Temple, Ayodhya, narendra modi

அயோத்தி: வரும் ஆக., 5ம் தேதி பிரதமர் மோடி, அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், இந்நிகழ்ச்சிக்கு அனைத்து முதல்வர்களும் அழைக்கப்பட உள்ளதாகவும் ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட் 5ம் தேதியன்று நடத்தப்படும் எனவும், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.


latest tamil news


இது தொடர்பாக ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது: ஆக.,5ம் தேதி ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து மாநில முதல்வர்களும் அழைக்கப்படுவார்கள். நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, 150 அழைப்பாளர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடிக்கல் நாட்டுவதற்கு முன், ராமர் மற்றும் ஹனுமான் காரி கோயிலில் மோடி, பிரார்த்தனை செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-ஜூலை-202021:44:31 IST Report Abuse
A.George Alphonse ஜெய் ஸ்ரீராமர் பகவான் ஆகஸ்டு 5 ஆம் தேதிக்கு பின் காரோண வைரஸை இந்த உலகத்தை விட்டே ஒழிக்க பிரார்த்தனை செய்வோம்.
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
22-ஜூலை-202021:32:50 IST Report Abuse
Rajan அதெல்லாம் ஓகே, ஹிந்து பாதுகாவலர்கள் சூசை ராவுல் இல்லாம அடிக்கல் நாட்டறிங்க, பரவைல்லையா? ஜெய் ஸ்ரீ ராம்
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
22-ஜூலை-202021:00:35 IST Report Abuse
Chandramoulli அம்மா அவர்கள் இந்த சமயத்தில் இல்லை. ஆன்மீகத்தில் அதிக ஆசை கொண்டவர் . போயும் போயும் சுடலைக்கும் , உண்டி குலுக்கிகளுக்கும் அழைப்பு . தேவையா
Rate this:
அச்சம் தவிர் தமிழா அடங்க மறு வீறு கொள் வெற்றி நமதே yaar unga ammava enna aachu andha ammave nalla NONVEG sappidum enru avargal velaikariye samaichu kodutha punniyavadhiye sonnar...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X