ராமர் கோயில்: ஆக.,5ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்| PM Modi to lay foundation stone of Ram Temple in Ayodhya on August 5 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராமர் கோயில்: ஆக.,5ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (11)
Share
அயோத்தி: வரும் ஆக., 5ம் தேதி பிரதமர் மோடி, அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், இந்நிகழ்ச்சிக்கு அனைத்து முதல்வர்களும் அழைக்கப்பட உள்ளதாகவும் ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு
அயோத்தி, ராமர்கோயில், மோடி, அடிக்கல், நாட்டுகிறார், PM Modi, lay foundation stone, Ram Temple, Ayodhya, narendra modi

அயோத்தி: வரும் ஆக., 5ம் தேதி பிரதமர் மோடி, அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், இந்நிகழ்ச்சிக்கு அனைத்து முதல்வர்களும் அழைக்கப்பட உள்ளதாகவும் ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட் 5ம் தேதியன்று நடத்தப்படும் எனவும், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.


latest tamil news


இது தொடர்பாக ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது: ஆக.,5ம் தேதி ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து மாநில முதல்வர்களும் அழைக்கப்படுவார்கள். நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, 150 அழைப்பாளர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடிக்கல் நாட்டுவதற்கு முன், ராமர் மற்றும் ஹனுமான் காரி கோயிலில் மோடி, பிரார்த்தனை செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X