அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி ஏற்பட வாய்ப்பு!

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 7.8 ஆகப் பதிவாகியுள்ளது.



latest tamil news




அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலிருந்து 105 கி.மீ., தூரத்தில் உள்ள பெரிவில்லேவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வடக்கு அமெரிக்காவில் சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



'பசிபிக் நெருப்பு வளையம் என, அழைக்கப்படும் 'ரிங் ஆப் பயர்' பகுதியில்தான் அலாஸ்கா உள்ளது. இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும். இதனால் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன' என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018 நவ., மாதம் அலாஸ்காவில், 7.0 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சாலைகள் மற்றும் பாலங்கள் மிகுந்த சேதம் அடைந்தன. அதன்பின், கடந்த ஆண்டு நவ., மாதம் அலூட்டியன் மற்றும் ஆண்ட்ரியானோப் தீவுப் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியது. இந்நிலையில் மீண்டும் அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
22-ஜூலை-202019:22:49 IST Report Abuse
S. Narayanan யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது ஆண்டவனே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X