பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி: விஜயபாஸ்கர்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
TN,Tamilnadu,Vijayabhaskar,தமிழகம்,தமிழ்நாடு,விஜயபாஸ்கர்

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
சுமார் 2.34 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த பிளாஸ்மா வங்கி மூலம், கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். கொரோனாவிலிருந்து மீணடு 14 நாட்கள் ஆன பின்னர் பிளாஸ்மா தானம் செய்யலாம். 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம்.

இதன் பின்னர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் செய்யலாம். அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். பிளாஸ்மா தானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும்.


latest tamil news


தமிழகத்தில் மேலும் ஏழு இடங்களில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும். சென்னை ஓமந்தூரார், ஸ்டான்லி, எம்ஜிஆர் மருத்துவ பல்கலையிலும், சேலம், திருச்சி, கோவை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும். பிளாஸ்மா சிகிச்சையால் ஏராளமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்ய டாக்டர் வடிவேல் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்துள்ளது. அதில் மார்ச் 1 முதல் ஜூன் 10 வரை 444 மரணங்கள் விடுபட்டுள்ளன. அதில் ஒரு சிலர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அது இன்றைய பட்டியலுடன் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
22-ஜூலை-202021:05:28 IST Report Abuse
Chandramoulli தவறு எங்கையோ உள்ளது . ஒன்று மாவட்ட கலெக்டர் , அல்லது மாநகராட்சி நிர்வாகம் அரசை தவறான பாதைக்கு எடுத்து செல்வது போல் தெரிகிறது. நோயின் உண்மை தன்மையை மறைக்கிறார்கள் .
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
22-ஜூலை-202019:18:14 IST Report Abuse
S. Narayanan good
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X