வரலாற்று கறையை துடைக்க முயலும் பிரிட்டன்; இந்தியர்களுக்கு தேர்வு

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Revise_OfficialHistory, India, BritishEmpire, UK, வரலாற்று கறை, பிரிட்டன், இந்தியர்கள், தேர்வு

லண்டன்: ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சிசெய்த காலத்தில் ஏகாதிபத்தியத்தில் ஈடுபட்டு இந்தியர்கள் பலரை அடிமையாக்கி கொடுமைகள் பல செய்தனர் என இன்றைய வரலாற்று பாடங்களில் எழுதப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் நாம் பிரிட்டன் அரசின் இரும்பு கரத்திலிருந்து விடுபட்டோம்.

ஆனால் இப்போது பிரிட்டனில் இந்திய குடிமக்கள் நிரந்தர குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். பல இந்திய செல்வந்தர்கள் தொழில் செய்துவருகின்றனர். இந்தியாவிலும் காலாகாலமாக ஆங்கிலேயர்களது அடக்குமுறைக்கு எதிராக நாடகங்கள், திரைப்படங்கள் என வந்து கொண்டிருக்கின்றன.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை சித்திரவதை செய்த ஆங்கிலேயர்களை அழித்த பல இந்திய வீரர்களின் வரலாறு பற்றி நாம் படித்திருப்போம். இவ்வாறு படித்து முடித்து பிரிட்டனில் வேலை செய்யும் இந்தியர்கள் மனதில் ஆங்கிலேயர்கள் குறித்த நீங்காத வன்மம் மற்றும் தவறான புரிதல் இருக்கும் என பிரிட்டன் அரசு கருதுகிறது.


latest tamil news


இதனை அடுத்து பிரிட்டன் அரசு தற்போது ஓர் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி 180 உலக வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இணைந்து வரலாற்று புத்தகம் ஒன்றை இயற்றியுள்ளனர். பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை பெறவிரும்பும் இந்தியர்களுக்கு கட்டாயமாக பிரிட்டன் இந்தியாவை ஆண்ட காலத்தில் நடந்த உண்மைகள் பற்றி தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பலரால் திரித்து எழுதப்பட்ட வரலாற்றைப் படிக்காமல் உண்மையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட வரலாற்றை படித்து உணர்ந்து, தகுதித்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இந்த தேர்வில் வெற்றிபெற்றால்தான் பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு 'லைப் இன் தி யுகே டெஸ்ட்' என்று பெயர். இத்தகவலை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வில் 24 கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு இந்தியாவிலிருந்து பிரிட்டனில் வாழும் பிரிட்டன் குடியுரிமை பெற விரும்பும் மக்கள் சரியாக பதிலளிக்க வேண்டும்.

பிரிட்டன் காலனி ஆட்சி இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க நாடுகள், ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்றது. அப்போது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பிரிட்டன் பல கொடும் செயல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிரிட்டன் இந்த கறையை எப்படியாவது துடைத்து பிரிட்டனில் வாழும் வெளிநாட்டவர்கள் பிரிட்டனை நேசிக்கும் வகையில் இருக்கவேண்டும் என நினைக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதன்மூலமாக பிரிட்டனில் நிரந்தர குடிமக்களாக விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு பிரிட்டன் மீது மரியாதை அதிகரிக்கும் என பிரிட்டன் அரசு கருதுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shakti - vilupuram,இந்தியா
26-ஜூலை-202014:26:44 IST Report Abuse
shakti பாகிஸ்தானில் இருந்து வந்த முக்கால்களுக்கு எதுவும் கேட்காமல் அப்படியே குடியுரிமை கொடுத்து, இன்று லண்டன் மாநகரில் மாற்று மதத்தினர் நடமாட இயலாத நிலை.. மேலும் பிரிட்டிஷ் பெண் குழந்தைகள் கற்பழிப்பு, கட்டாய மதமாற்றம், தீவிரவாத செயல்கள் என்று பாகிஸ்தானியர் செய்யாத குற்றங்கள் ஒன்றுமில்லை.. ஆனால், இந்தியர்கள் என்று வந்தால் மட்டும் இவனுங்க கண்ணில் விளக்கெண்ணை விட்டு நோண்டி நோண்டி பார்ப்பார்கள்... மே காட் சேவ் பிரிட்டன் ...
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
26-ஜூலை-202012:38:38 IST Report Abuse
Nallavan Nallavan பகைமை மறையாது... மாறாக வன்மம் வளரும்.....
Rate this:
Cancel
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-202014:02:44 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan So, UK government wants to hide real history , real history is , Indians more affected by British government and 90 % our gold , diamonds and properties theft by British government , till more properties by christian community because of British government , India churches are bigger than our temples , all churches in India have more land and power because of British government ..no one can hide this old history ..we are , Hindus are useless, no help from present government side nor temple side ..but christian and Muslims are getting more help from their churches , Mosques and their educational institutions.. 100 % admission for them , 100 % job for them in christian and Muslim community educational institutions ..but for Hindus.. no help from any side ..with out money many Hindu family's are in same poor condition last 5 generations .. who will develop Hindus poor family ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X