முத்தலாக் தடை சட்டத்தால் 82 சதவீத விவாகரத்து குறைவு

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: முத்தலாக் தடை சட்டத்தின் காரணமாக கடந்த ஓராண்டில் 82 சதவீத அளவிற்கு விவாகரத்து குறைந்து உள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறி உள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் கூறி இருப்பதாவது: முத்தலாக் சட்டம் இயற்றப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைய உள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முஸ்லிம் பெண்களுக்கு சமூக தீமைகளில் இருந்து விடுதலை கிடைத்த நாள். ஆக.,ஒன்றாம் தேதி நாட்டின் வரலாற்றில் முஸ்லிம் பெண்கள் உரிமை தினம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக.,1ம் தேதி இந்திய பார்லி., வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாகும். இந்த நாள் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு, அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்திய நாள். இச்சட்டம் பெண்களுக்கு நம்பிக்கை அளித்தது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு முஸ்லீம் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார, அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை வலுப்படுத்தியது. என கூறினார்.


latest tamil newsவெளிநாடுகளை பொறுத்தவரையில் முதன் முறையாக எகிப்து நாடு கடந்த 1929 -ல் இச்சட்டத்தை ரத்து செய்தது. தொடர்ந்து சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ்,ஈராக், சிரியா, மலேசியா, சைப்ரஸ், ஜோர்டான், அல்ஜீரியா, ஈரான், புருனே, மொராக்கோ, கத்தார், யு.ஏ.இ., உள்ளிட்ட நாடுகளும் இச்சட்டததை நிறைவேற்றி உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா சரி , ஆனா எவ்ளோ பேர் தலாக் சொல்லாமலே மனைவியை பிரிந்தார்கள் ன்னு சொல்லேன்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-202023:28:26 IST Report Abuse
Rajagopal குடி மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும். மத ரீதியாக சலுகைகள் வழங்குவது மத சார்பற்ற நாட்டிற்கு ஏற்றதல்ல. ஆனால் ஷாரியாவில் இருக்கும் சில சட்டங்களை இரவல் வாங்கி நாட்டில் சட்டமாக இயற்றுவது நல்லது - ஊழல், லஞ்சம் போன்ற குற்றங்களுக்கு மக்கள் முன்னால் சாட்டியடி, சிறை என்று விதிக்க வேண்டும். பெண்களை அவமானப் படுத்துபவர்களை எல்லோரும் பார்க்கும் படி தலையை வெட்ட வேண்டும். வயதில் சிறியவர்களாக இருந்தால் கீழே இருப்பதை எடுத்து விட வேண்டும். அதிகாரிகள், மந்திரிகள், நீதிபதிகள், காவல் துறையினர் தவறு செய்தால் தண்டனை சாதாரண மனிதனை விட பத்து மடங்கு அதிகம் இருக்க வேண்டும். அவர்கள் பதவி ஏற்கும் போதே, தனது உயிரை பணயமாக வைக்கிறேன் என்று கையெழுத்திட வேண்டும். அவர்கள் மீது இருக்கும் குற்ற சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனையை தவிர்த்து வேறு எதுவும் கூடாது. இப்படி செய்திருந்தால், இந்த நாடு இன்று இந்த நிலையில் இருக்காது.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-ஜூலை-202023:18:48 IST Report Abuse
வெகுளி முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாக எண்ணற்ற அப்பாவி இசுலாமிய சகோதரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் மோடிஜி..... தங்கள் வீட்டுப்பெண்களை இடைச்செருகலாக வந்த தலாக் எனும் சமூக அவலத்திலிலிருந்து காப்பாற்றிய மோடிக்கு இசுலாமிய சகோதரர்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளனர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X