ஆட்சியை கவிழ்க்க சதி : பிரதமர் மோடிக்கு கெலாட் கடிதம்| Dinamalar

ஆட்சியை கவிழ்க்க சதி : பிரதமர் மோடிக்கு கெலாட் கடிதம்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (7)
Share
 Ashok Gehlot Writes To PM, ஆட்சியை கவிழ்க்க சதி : பிரதமர் மோடி,கெலாட் கடிதம்Alleges Attempt To Topple Rajasthan Government

இந்த செய்தியை கேட்க

ஜெயப்பூர்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.வினர் ஈடுபடுவதாக ராஜஸ்தான் காங். முதல்வர் அசோக் கெலாட் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜஸ்தானில் காங். கட்சியைச் சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தனது 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பா.ஜ. துணையுடன் கெலாட் அரசை கவிழ்க்கும் முயற்சியில் சச்சின் பைலட் ஈடுபட்டு வருவதாகவும், இதன் காரணமாக தான் தன் மீதான தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.


latest tamil news




இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் கெலாட்டின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அதில் ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசை கவிழ்கும் முயற்சியில் பா.ஜ.வினர் மற்றும் மத்திய அமைச்சர் உள்ளளிட்டோர் முயற்சித்து வருகின்றனர். கொரோனா பரவியுள்ள இக்கட்டான நிலையில் இது போன்ற செயல் ஏற்புடையதல்ல. மக்களின் உயிருக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X