பொது செய்தி

இந்தியா

கொரோனா பயம் எதிரொலி: இந்தியாவில் கொகோ கோலா விற்பனை வீழ்ச்சி

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சம் காரணமாக இந்தியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் கொகோ கோலா குளிர்பான விற்பனை பெருமளவு சரிந்துள்ளது.latest tamil newsகொகோ கோலா நிறுவனத்திற்கு இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய சந்தையாக உள்ளது. இங்கு கோடைகாலமான ஏப்., முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் குளிர்பானங்கள் அதிக அளவில் விற்பனையாகும். ஆனால், இந்தாண்டு கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்காலும், மக்களிடையே ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாகவும் கொகோ கோலா விற்பனை கடுமையாக சரிந்துள்ளது இந்தியாவில் மட்டும் இதன் விற்பனை 12 சதவீதம் சரிந்தது.


latest tamil newsஅமெரிக்காவின் அட்லாண்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொகோ கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டாவது காலாண்டு அறிக்கையில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவலால் குளிர்பானங்கள் விற்பனை 16 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் அதன் நிகர வருமானம் 28 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும், ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை 24 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மட்டும் இந்தியாவில் ரூ20,000 கோடி அளவுக்கு குளிர்பானங்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
24-ஜூலை-202004:17:20 IST Report Abuse
Rajesh பாட்டில் குளிர்பானத்தை இனி வரும் காலங்களில் அறவே தவிர்க்கவும்.... வேண்டுமென்றால் நன்னாரி சர்பத் குடிக்கலாம்.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
23-ஜூலை-202005:02:36 IST Report Abuse
B.s. Pillai Most hrmful drink. It is victory for advertisements that coke, coco cola, and other drinks gained its market, not a single health benefit. We should teach our kids to drink Nanari sarbat, lime juice, coconut water ,நெல்லிக்காய் juice .These are really improving the health and immunity. I was under treatment for diabetics and htey were giving me only juices of curry leaves, சுக்கு நீர், coconut water,and other fruit juices and night fruits. My diabetic is now below normal. No rice or cooked meals. Indian food habits are medicine based. It is because of western influence and the elaborate advertisements had changed the minds of Indians and we are noe becoming the feeding ground for western companies and pharma companies to amass wealth out of our ignorance.There is good medicine for each disease in our Ayurveda, Siddha and Unani medicines. They are preventive in nature. that was the reason why there was no cancer or any serious disease in our ancestors and htey lived for longer years in prime health. " ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி. "
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஜூலை-202004:59:16 IST Report Abuse
தல புராணம் ராமர் கோவில் கட்டுறதாலே கோகோ கோலா விற்பனை குறைந்து விட்டது..
Rate this:
25-ஜூலை-202018:50:38 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலிunnaukku coco cola thevai vadum. ramar bakthargal engalukku thevai padaathu.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X