அத்வானியுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா திடீர் சந்திப்பு| Dinamalar

அத்வானியுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா திடீர் சந்திப்பு

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (11)
Share
புதுடில்லி: பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா அத்வானியை திடீரென சந்தித்து பேசினார்.1992 ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, ஆக., 31க்குள் முடிக்க, உ.பி.,யின் லக்னோவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பா.ஜ. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, 92, முரளி மனோகர் ஜோஷி
Amit Shah Meets BJP Veteran  அத்வானி, அமித்ஷா திடீர் சந்திப்பு LK Advani Ahead Of Babri Case Hearing

புதுடில்லி: பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா அத்வானியை திடீரென சந்தித்து பேசினார்.

1992 ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, ஆக., 31க்குள் முடிக்க, உ.பி.,யின் லக்னோவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பா.ஜ. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, 92, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்களது வாக்குமூலத்தை, வரும், 24ம் தேதி, 'வீடியோ கான்பரஸ்' வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என, சிறப்பு நீதிபதி, எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நாளை மறுநாள் பதிவு செய்யப்படவுள்ளது.


latest tamil news
இந்த சூழ்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசினர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X