தெலுங்கானாவின் மீட்பு விகிதம் 74 சதவீதமாக உயர்ந்தது

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும், இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மாநிலத்தின் நோய் தொற்றின் மீட்பு விகிதம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,430 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானாவில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,705 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 7 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 429 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 2,062 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 36,385 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று நிலவரப்படி, 10,891 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரு நாளில் 16,855 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 1,430 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தின் நேர்மறை விகிதம் 8.5 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 0.8 சதவீதமாக (குறைவாக) உள்ளது.


latest tamil news



புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஐதராபாத்தில் (GHMC) 703 பேர், ரங்காரெட்டியில் 117 பேர், மேட்சலில் 105 பேர், சங்காரெட்டியில் 50 பேர், கம்மம் மாவட்டத்தில் 14 பேர் , கமாரெட்டியில் 43 பேர், வாரங்கல் (நகரம்) 34 பேர், வாரங்கல் (கிராமம்) 20 பேர், நிர்மலில் ஒருவர், கரீம்நகர் மற்றும் சூர்யாபேட்டையில் தலா 27 பேர், ஜக்தியாலில் 18 பேர், யாதாத்ரியில் 9 பேர், மஹபூப்பாத்தில் 27 பேர், பெடப்பள்ளி மற்றும் கட்வாலில் தலா 4 பேர், மெடாக்கில் 26 பேர், மஹபூப்நகரில் 6 பேர், மான்ச்சேரியல் மற்றும் கோதகுண்டத்தில் தலா 5 பேர், பூபல்லபள்ளியில் 27 பேர், நல்கொண்டாவில் 45 பேர், சிர்சில்லாவில் 8 பேர், அதிலாபாத்தில் 7 பேர், விக்ராபாத் மற்றும் ஜன்கானில் தலா 9 பேர், நாகர்கர்னூலில் 18 பேர், நிஜாமாபாத்தில்
48 பேர் அடங்குவர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X