பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; மீண்டும் முழு ஊரடங்கு?

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 1,038 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல் முறை. இதையடுத்து கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.



latest tamil news


புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 87 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளனர். 109 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். அதில் 57 பேருக்கு தொற்று யார் மூலமாக ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை. தற்போது கேரளாவில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 8,818 ஆக உள்ளது. இதுவரை 6,164 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 20,847 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.


latest tamil news



அதிக பட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 226 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 190 பேருக்கு உள்ளூர் பரவல் மூலம் தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் பொது முடக்கம் அமல்படுத்துவது குறித்து அரசு பசீலித்து வருவதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha,கத்தார்
23-ஜூலை-202012:08:06 IST Report Abuse
vasan எங்க்கே போராட்டம் வெடிக்குமோ என்ற பயம் தான்........
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23-ஜூலை-202005:09:33 IST Report Abuse
NicoleThomson பக்கத்து மாநிலங்கள் உஷாரா இருக்கோணும் , கேஸ் அதிகமானால் தள்ளிவிட்டுருவானுங்க
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஜூலை-202023:04:54 IST Report Abuse
Bhaskaran கெட்டிக்காரனின் புளுகு வெட்டவெளிச்சமாகப் போய்விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X